Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com
Tel Aviv-Vienna flight makes emergency landing after Bomb threat: டெல் அவிவ்-வியன்னா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்
இஸ்ரேலின் டெல் அவிவ்வில் இருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவசர அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது.
ருமேனியா நாட்டின் வான்பரப்பை ஏர்பஸ் ஏ320(Airbus A320) ரக விமானம் நெருங்கி கொண்டிருந்த போது, விமான குழுவினர் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவசரகால நெறிமுறைகள் படி விமானத்தை பல்கேரியா நாட்டின் சோபியா சர்வதேச விமான நிலையத்தில் விமானிகள் தரையிறக்க முடிவு செய்தனர்.
பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக பல்கேரியா நாட்டின் விமானப்படை போர் விமானம் ஒன்று உடன் பறந்து இறுதிவரை வழிநடத்தியதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் அதிலிருந்த 51 பயணிகள் மற்றும் 6 விமான நிலைய பணியாளர்கள் என அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், விமான நிலைய அவசர கால குழுக்கள் விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலுக்கான காரணம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு, நாகப்பட்டிணத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி மற்றும் ஐவர்
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்குசர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில்
விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தைச்
சேர்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான பூபாலன்
மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI)
அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழக வெற்றி கழக தலைமை
இந்த சோதனையில் 270 கோடி ருபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன்
போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து பூபாலன், சுகன், சதீஷ்குமார், சுகநாதன், மணிகண்டன் ஆகிய 5 பேர்
கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக நாகை மாவட்ட செயலாளர் பூபாலனை
கட்சியிலிருந்து நீக்குவதாக கட்சியின் தலைமை அறிவித்தது.
அதேநேரம் கைது செய்யப்பட்டவர்கள் வேதாரண்யம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி
சுதா முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 30 வரை நீதிமன்றக் காவலில்
வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்தவர்
பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்றும், சந்தேகிக்கப்படும் கடத்தல் வலையமைப்பு குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்தத் தொடர்பை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டு, தமிழகத்தின் சில பகுதிகளில் விநியோகம் செய்வதற்கும், இலங்கைக்குக் கடத்துவதற்கும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்பட்டதா மற்றும் திரையுலகைச்சேர்ந்த நடிகர், நடிகைகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் அறிமுகமான பெண்ணைத் திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற ஆசையில், தனது சொத்துகளை விற்று சுமார் 1,900 கிலோமீற்றர் பயணம் செய்த 49 வயதுடைய நபர் ஒருவர், இறுதியில் அந்தப் பெண் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மரன்ஹாவோ மாநிலத்தைச் சேர்ந்த எடிமார் மார்ட்டின்ஸ் என்பவரே இவ்வாறு ஏமாற்றமடைந்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜெசிகா ஒலிவேரா என்ற பெண்ணுடன் காதல் உறவில் இருப்பதாக நம்பிய மார்ட்டின்ஸ், அவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்ததாகக் கூறப்படும் ஜெசிகா, கிராமப்புற வாழ்க்கை மற்றும் பண்ணை வீட்டில் வசிப்பது தொடர்பான காணொளிகளைத் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.
இந்தக் காணொளிகளைப் பார்த்த மார்ட்டின்ஸ், அவருடன் இணைந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என நம்பியுள்ளார்.
இதனையடுத்து, அந்தப் பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்துகொள்ளும் நோக்கில், தன்னிடமிருந்த சொத்துகளை விற்று பணம் திரட்டியுள்ளார்.
பின்னர், பேருந்துகள் மூலம் சுமார் 1,900 கிலோமீற்றர் பயணம் செய்து, ஒக்டோபர் 11ஆம் திகதி பெலோ ஹொரிசோன்டே நகரைச் சென்றடைந்துள்ளார்.
எனினும், அங்கு சென்ற பின்னர் ஜெசிகாவைத் தேடியபோது, அவர் உண்மையான நபர் அல்ல என்பதும், சமூக வலைத்தளங்களில் காணப்பட்ட உருவம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த மார்ட்டின்ஸ், தனது சொத்துகளை விற்றுப் பெற்ற பணத்தையும் இழந்த நிலையில், சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான வசதியின்றித் தவித்துள்ளார்.
இதனையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக சேவையாளர்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். அவருக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கியதுடன், சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான பயணச்சீட்டையும் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான நபர்கள் மற்றும் காட்சிகளை உண்மையென நம்புவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இணையவழிக் காதல் உறவுகளில் ஈடுபடுவோர், தாங்கள் தொடர்புகொள்ளும் நபரின் உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் பணம் செலவிடுவதையோ, சொத்துகளை விற்பதையோ தவிர்க்க வேண்டும் என்பதையும் இச்சம்பவம் நினைவூட்டுகிறது.
மட்டக்களப்பு பிரதேசமொன்றில், 14 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் பெரியப்பாவான 43 வயதுடைய நபருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே. பிரபாகரன் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம்
குறித்த சம்பவம் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம், சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த 14 வயது சிறுமியைக் கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
இந்த வழக்கில், அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் வழக்குத் தொடுநர் தரப்பில் ஆஜராகி வாதாடினர்.
வழக்கு விசாரணைகளின் முடிவில், குறித்த நபர் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் 18ஆம் திகதி குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கான தண்டனைத் தீர்ப்பு 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இதன்போது, சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியைக் கவர்ந்து சென்ற முதலாவது குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றமான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த நஷ்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், இரண்டு ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு குற்றங்களுக்காகவும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, குற்றவாளிக்கு மொத்தமாக 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பண்டாரகம, வெல்மில்ல ஸ்ரீ சாராலங்கார பாடசாலையில் 7ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 11 வயது மாணவன் மீது, பாடசாலையின் அதிபர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்டாரகம காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவன் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறி, அதிபர் அவரது முகத்தின் இருபுறமும் கைகளால் பலமாகத் தாக்கியுள்ளதாக மாணவனின் தந்தை காவல்துறையில் அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலினால் குறித்த மாணவனுக்குப் பல் துலக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர் முதலில் வேதர பிரதேச மருத்துவமனையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் கொடூரத் தாக்குதலைப் பாடசாலையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிபர் அவர் மீது ஆத்திரமடைந்துள்ளார்.
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஏனைய ஆசிரியர்கள் மூலம் மனு ஒன்றில் கையொப்பம் பெற்று, குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தரைப் பாடசாலையிலிருந்து நீக்குவதற்கு அதிபர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கு ஹொரணை வலயக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் மீதான தாக்குதல் மற்றும் தனது வேலைக்கு ஏற்பட்டுள்ள சட்டவிரோத நெருக்கடிகள் குறித்துச் சம்மந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பண்டாரகம காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
Tiger Shroff Assassination Attempt In Mumbai: பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
மும்பையின் ஜூஹூவில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.//
இந்த தாக்குதலில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் ஃபிர்தோஷ் மற்றும் அங்கிருந்த மற்றொரு நபர் பலத்த காயமடைந்தனர்.
ஆரம்பக்கட்ட தகவலின் படி, டைகர் ஷெராஃப் இந்த தாக்குதலில் எந்தவொரு காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது ஓட்டுநர் பிர்தோஷின் இடது கையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg>
View this post on Instagram
A post shared by Varinder Chawla (@varindertchawla)
டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இந்த கும்பல் சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
15 குழுக்கள் அமைப்பு
இந்நிலையில் டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த 15 தனிப்படை குழுக்களை அமைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை ஆணையரிடம் முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Women won by 9 wickets against Zimbabwe Women: ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி அபார வெற்றி
103 ஓட்டங்கள் குவித்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது.
8.5 ஓவர்கள் முடிவிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஷஃபாலி வர்மா 55 ஓட்டங்களையும், மந்தனா 47 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவின் தென்மேற்கு அஸீர் மாகாணத்தின் தலைநகரான அப்ஹா (Abha City) மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு  அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் அந்த அச்சுறுத்தல் தணிந்துவிட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி சிவில் பாதுகாப்பு ஆணையம் இதனை தெரிவித்திருந்தது.
தேசிய அவசரகால முன்கூட்டிய எச்சரிக்கை தளத்தின் (National Early Warning Platform) ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்து.
ட்ரோன் தாக்குதல்கள்
செங்கடலுக்கு அருகில் அமைந்துள்ள எல்லைப் பிராந்திய நகரங்களை இலக்கு வைத்து ஏமனின் ஹூதி அமைப்பினர் தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே இந்த அவசர எச்சரிக்கை சமிக்ஞைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அப்ஹா நகரம் மற்றும் கமீஸ் முஷைத் (Khamis Mushait) பிராந்தியங்களிலுள்ள பொதுமக்களின் அலைபேசிகளுக்குத் தேசிய அவசரகால எச்சரிக்கை முறைமை மூலம் ஆபத்து குறித்த தகவல்கள் உடனடியாக அனுப்பட்டுள்ளன.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுச் சில நிமிடங்களிலேயே, சாத்தியமான ஆபத்துத் தணிந்துவிட்டது எனச் சவூதி சிவில் பாதுகாப்புத் துறை தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தது.
உங்கள் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, சிவில் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டல்களைத் தொடர்ந்து பின்பற்றுவதுடன் தாக்குதல் பகுதிகள் அல்லது இடைமறிப்பு சம்பவங்கள் நடக்கும் இடங்களில் கூடுவதையும் அவற்றை ஒளிப்பதிவு (Filming) செய்வதையும் தவிர்க்கவும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வான் பாதுகாப்புப் படைகளின் இடைமறிப்பு நடவடிக்கைகள் மற்றும் சேதப் பகுதிகளைப் படம்பிடித்து வெளியிடுவது சவூதி சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் சிறுவர்களின் உயிரிழப்புகளுக்குத் துணைபுரிவதாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மைய நிறுவனங்களுக்கு நிதி, நிலம், மின்சாரம் உள்ளிட்ட எந்தவொரு வளங்களையும் வழங்க வேண்டாம் எனப் பிராந்திய வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகர் மொஹம்மத் பாகர் கலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள், முதலீட்டு நிதியங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களின் உயிரிழப்புகளுக்கும் உதவுவதாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு நிறுவனங்களுக்கு எந்தவிதமான ஆதரவையும் வழங்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இத்தகைய நிறுவனங்களுக்கு நிதி உதவி, பங்குமுதலீடு, நிலம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வளங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பிராந்தியத்தின் கடல்சார் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளைக் கண்காணிக்கும் நோக்கில், ‘பெர்சிய வளைகுடா தரவு அதிகாரசபை’ என்ற புதிய அமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்றும் கலிபாஃப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் உளவுப் பணிகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மற்றும் தரப்பினர், ஈரானின் நேரடி சட்ட மற்றும் இராணுவ அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்புக்கும் இடையிலான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரான்சின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நாட்டு
மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
முன்னதாக, விலைவாசி உயர்வு மற்றும் பொதுச் சேவைகள் முடக்கத்திற்கு எதிராக
பிரான்ஸ் நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்கள் தீவிர வன்முறையாக
மாறியுள்ளன.
பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்
பாரிஸ், லீல், மார்சேய், போர்டோ மற்றும் லில்லி போன்ற முக்கிய நகரங்களில்
கடைகள், வர்த்தக மையங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் சூறையாடப்பட்டு
தீக்கிரையாக்கப்பட்டன.
லிமோஜஸ் (Limoges) நகரில் உள்ள 143 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க
நகர மண்டபம் (Town Hall) தீவைத்து எரிக்கப்பட்டது
இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைகளில் 600-க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
பாரிஸில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர் ஒருவர்
மாரடைப்பால் உயிரிழந்தார்.
பதவி விலக வேண்டும்
முன்னணி வணிக நிறுவனங்களான Carrefour போன்றவற்றின் 50-க்கும் மேற்பட்ட கடைகள்
சேதப்படுத்தப்பட்டு சூறையாடப்பட்டதால் கோடிக்கணக்கான யூரோ இழப்பு
ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளுக்கு தீவிர இடதுசாரி அமைப்புகளே காரணம் என அரசு குற்றம்
சாட்டியுள்ளது.
அதேவேளையில் தீவிர வலதுசாரி தலைவர் ஜோர்டான் பாரடெல்லா,
ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உடனடியாக பதவி விலக வேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்
4 Soldiers Killed in Alberta Military Base Fire: கனடாவின் ஆயுதப்படை தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்து காரணமாக 4 வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக கனேடிய பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆயுதப்படை தளத்தில் வெடிப்பு விபத்து
சனிக்கிழமை கனடாவின் எட்மன்டனுக்கு கிழக்கே வெய்ன்ரைட் ஆயுதப்படை தளத்தில் வெடிப்பு மற்றும் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் தீயை அணைக்க கடும் சவால்கள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் நடைபெற்று வந்த ஆல்பர்ட்டா பொதுவாக்கெடுப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு அங்கிருந்த வாக்குப்பதிவு மையமும் உடனடியாக மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காட்சிகளில், ராட்சத அளவிலான கரும்புகை வானில் எழும்பும் காட்சிகள் பார்க்க முடிகிறது.
4 வீரர்கள் உயிரிழப்பு
இந்நிலையில் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள வேய்ன்ரைட் கனேடிய ஆயுதப்படை தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீரர்கள் வரை உயிரிழந்து இருப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் நம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரமான வீரர்களை இழந்து முழு நாடும் துக்கத்தில் ஆழ்ந்து இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் டஜன் கணக்கானோர் பலத்த காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Macron going to Persian Gulf to secure energy supply: எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் தொடர் போர் நடைமுறைகள் காரணமாக உலக அளவில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை  உறுதி படுத்தும் நோக்கில், வளைகுடா நாடுகளுக்கு திங்கட்கிழமை முதல் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் நேரடியாக பங்கேற்காத போர் நடைமுறையின் விளைவாக பிரான்ஸ் மக்களும் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் தினசரி வாழ்க்கை செலவினங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறை சார்ந்த முடிவுகளை பிரான்ஸ் மக்கள் எதிர்பார்ப்பதை முழுமையாக நான் உணர்ந்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வாங்கும் திறனையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாகும். இந்த சிக்கல்களை தீர்க்க அரசு தீவிரமான முயற்சிகளை செய்து வருவதாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதுகாப்பதே தன்னுடைய அரசின் முதன்மையான முன்னுரிமை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் பறப்பு இந்த மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் இடம்பெறவுள்ளதாகவும் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன் முதலாவது சோதனைப் பறப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் (Colombo Port City) நடைபெறவுள்ளது.
இரு பயணிகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஆளில்லா வானூர்தி, தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் வரை பறக்கும் வசதி கொண்டது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான 'EHang' அறிமுகப்படுத்திய 'Global Fast Track Programme' திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக இலங்கை திகழ்கிறது.
இதன் மூலம் ஓட்டுநரற்ற மின்சார செங்குத்து ஏறுதல் மற்றும் இறங்குதல் (eVTOL) வானூர்தி சேவை சர்வதேச அளவில் விரைவுபடுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முதன்மை செயல்பாட்டு மண்டலமாக கொழும்பு துறைமுக நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேவையான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டு பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படும்.
சிகிரியா மற்றும் பிதுரங்கலை மீதான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பறப்புகள், மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கும் கொழும்பில் உள்ள நட்சத்திர உணவகங்களுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, சுற்றுலாத் துறை மட்டுமின்றி, கடல்சார் தளவாடங்கள் (Maritime Logistics) உள்ளிட்ட பிற துறைகளிலும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் பறப்பு இம்மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் இடம்பெறவுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, ‘போராட்டம்’ (Porattam) திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல்கள் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளன.
பாஸ்கரன் கந்தையா வழங்கும் இத்திரைப்படத்தை IBC Tamil Productions மற்றும் BlackBoard International ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
பூவன் மதீசன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
சிறப்புத் திரையிடல் நடைபெறும் இடங்கள் மற்றும் நேரங்கள்
1. லூசர்ன் – எபிகோன் (Luzern – Ebikon)
திரையரங்கம்: Pathé Ebikon
முகவரி: Ebisquare Strasse 2, 6030 Ebikon
நேரம்: காலை 10.00 மணி
தொடர்புகளுக்கு:
ரவி – 077 925 77 48
இந்திரன் – 076 338 38 70
சந்திரன் – 076 755 59 52
வினுசன் – 076 494 35 21
2. ராப்பர்ஸ்வில் (Rapperswil)
திரையரங்கம்: Schlosskino Rapperswil
முகவரி: Fischmarktstrasse 4, 8640 Rapperswil-Jona
நேரம்: காலை 10.30 மணி
தொடர்புகளுக்கு:
அருண் – 077 902 10 17
உதயன் – 079 614 81 72
ஆதித்தன் – 076 479 93 93
சசி மோகன் – 079 660 55 08
3. துர்காவ் – வெய்ன்ஃபெல்டன் (Thurgau – Weinfelden)
திரையரங்கம்: LIBERTY CINEMA
முகவரி: Amriswilerstrasse 106B, 8570 Weinfelden
நேரம்: மாலை 4.30 மணி
தொடர்புகளுக்கு:
சீனி அண்ணன் – 076 404 47 03
மஹி – 079 550 05 74
தாயகக் கலைஞர்களின் படைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திரையிடல்களில் கலந்துகொண்டு, கலைஞர்களை ஊக்குவிக்குமாறு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களுக்கு அல்லது சிறுவர்களின் உயிரிழப்புகளுக்குத் துணைபுரியும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்களுக்கு நிதி, நிலம், மின்சாரம் உள்ளிட்ட எந்தவொரு வளங்களையும் வழங்க வேண்டாம் எனப் பிராந்திய வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகர் மொஹம்மத் பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் விரைவில் பெர்சிய வளைகுடா தரவு அதிகாரசபை உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அரசாங்கங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள், முதலீட்டு நிதியங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குக் கனிவான வேண்டுகோள், ஆக்கிரமிப்புகளுக்கும் சிறுவர்களின் கொலைகளுக்கும் உதவும் எந்தவொரு AI அல்லது தரவு நிறுவனங்களுக்கும் எவ்வித வளங்களையும் வழங்க வேண்டாம்.
இத்தகைய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிதி, பங்குகள் (Equity), நிலம் மற்றும் ஆற்றல்/மின்சாரம் (Energy) போன்ற எதனையும் வழங்கக் கூடாது.
பிராந்திய கடல்சார் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளைக் கண்காணிக்க பெர்சிய வளைகுடா தரவு அதிகாரசபை எனும் புதிய அமைப்பு விரைவில் களமிறங்கும்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை அல்லது உளவுப் பணிகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மற்றும் தரப்பினர் ஈரானின் நேரடி சட்ட மற்றும் இராணுவ அமலாக்க நடவடிக்கைகளை (Enforcement) எதிர்கொள்ள நேரிடும்” என அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இலங்கை காவல்துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, ஐக்கிய நாடுகள் சபையின் குற்றக்குழு ஒழிப்புப் படையில் (Gang Suppression Force - GSF) பணியாற்றுவதற்காகக் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் (STF) 45 உறுப்பினர்களைக் கொண்ட முதற்கட்டப் பிரிவு கடந்த 16ஆம் திகதி ஹெய்ட்டி நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த விசேட அணியில் 7 ஆய்வாளர் தர அதிகாரிகளும், 38 ஏனைய நிலை உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் ஹெய்ட்டியில் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் கீழ் தமது அதிகாரப்பூர்வ கடமைகளை மேற்கொள்வர்.
பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையினால் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வானூர்தி மூலம் இவர்கள் பயணமாகினர்.
காவல்துறை தலைமை ஆய்வாளர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிறப்பு அதிரடிப் படையின் பதில் கட்டளை அதிகாரி, பிரதி காவல்துறை மாஅதிபர் ரோய் சுமனவர்தன ஆகியோரின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்தப்பயணம் ஒருங்கிணைக்கப்பட்டது.
வானூர்தி நிலையத்தில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் நேரில் வருகை தந்து, ஹெய்ட்டி செல்லும் அதிகாரிகளுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹ்தத் அக்லாகி கெதாப்ஜி (Mehrdad Akhlaghi Ketabchi) அந்த நாட்டு நாடாளுமன்றத்தால் பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அதன் நட்பு நாடுகள் ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அமெரிக்காவும் அந்த பிராந்தியமும் "மிகப்பெரிய சேதத்தை" சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த புதிய நியமனம் மற்றும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறைக் கலவரங்களாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வன்முறைகளால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கலவரங்களின்போது, லிமோஜ் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரசபைக் கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல வர்த்தக நிலையங்களும் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸில் பல்வேறு நகரங்களில் வன்முறைக் குழுக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தேர்தல்கள் நெருங்கும் நிலையில், வன்முறை சம்பவங்களினால் பிரான்ஸில் சமூகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக, பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நாட்டு
மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
முன்னதாக, விலைவாசி உயர்வு மற்றும் பொதுச் சேவைகள் முடக்கத்திற்கு எதிராக
பிரான்ஸ் நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்கள் தீவிர வன்முறையாக
மாறியுள்ளன.
பாரிஸ், லீல், மார்சேய், போர்டோ மற்றும் லில்லி போன்ற முக்கிய நகரங்களில்
கடைகள், வர்த்தக மையங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் சூறையாடப்பட்டு
தீக்கிரையாக்கப்பட்டன.
நகர மண்டபம்
லிமோஜஸ் (Limoges) நகரில் உள்ள 143 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க
நகர மண்டபம் (Town Hall) தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட 2000 இற்கும் மேற்பட்டோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைகளில் 600 இற்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.
ஏற்பட்ட மோதல்
பாரிஸில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர் ஒருவர்
மாரடைப்பால் உயிரிழந்தார்.
முன்னணி வணிக நிறுவனங்களான Carrefour போன்றவற்றின் 50 இற்கும் மேற்பட்ட கடைகள்
சேதப்படுத்தப்பட்டு சூறையாடப்பட்டதால் கோடிக்கணக்கான யூரோ இழப்பு
ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளுக்கு தீவிர இடதுசாரி அமைப்புகளே காரணம் என அரசு குற்றம்
சாட்டியுள்ளது.
அதேவேளையில் தீவிர வலதுசாரி தலைவர் ஜோர்டான் பாரடெல்லா,
ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உடனடியாக பதவி விலக வேண்டும் என
வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
கனடாவில் இராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவமானது கனடிய இராணுவம் எதிர்கொண்ட மிக மோசமான துயரச் சம்பவங்களில் இது ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இதனை தெரிவித்துள்ளார்.
அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் அமைந்துள்ள முன்னணி இராணுவப் பயிற்சித் தளமான வெய்ன்ரைட் படைத்தளத்தில் (Canadian Forces Base Wainwright) கடுமையான தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.
இராணுவ வீரர்கள்
இதில் நான்கு இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் பல டசன்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சமகால அமைதிக்காலத்தில் கனடா இராணுவம் எதிர்கொண்ட மிக மோசமான துயரச் சம்பவங்களில் இது ஒன்று என அதிர்ச்சி வெளியிட்டுள்ள மார்க் கார்னி, உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களை அவர் தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் எட்மண்டனில் (Edmonton) உள்ள ராயல் அலெக்ஸாந்திரா வைத்தியசாலை Code Orange எனப்படும் பேரழிவு அவசரகால சிகிச்சை நெறிமுறையை அறிவித்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தீயணைப்புப் படைப்பு
தற்போது தீயணைப்புப் படையினரால் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் மீண்டும் தீ பரவாமல் தடுப்பதற்காக மீட்புக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இத்தீ விபத்து எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையின் விளைவாகவும் ஏற்படவில்லை என கனடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கான பின்னணி குறித்து மேலதிக உத்தியோகபூர்வ விளக்கங்கள் விரைவில் வெளியிடப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அச்சுறுத்தல் காணொளிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படைவீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் கடுமையான முடிவுகளை எடுப்போம் என்ற தொனியில் வெளியிடப்பட்டுள்ள காணொளிகள், சிங்கள மொழி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
30 ஆண்டுகளாக நாட்டுக்காகப் போராடிய படைவீரர்களை எவ்வாறு தண்டிக்க முடியும் என்ற கேள்வியும் குறித்த காணொளிகளில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ அச்சுறுத்தி தீர்மானங்களை மாற்றவைக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராகச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பௌத்த தேரர்களின் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான அச்சுறுத்தல் காணொளிகளின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை எடுத்துவருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
Vietnam and 4 EU countries Sign Free Trade Deal: ஐரோப்பிய நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் வியட்நாம் கையெழுத்திட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத வியட்நாம் முக்கியமான நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்துள்ளது.
இது பிராந்திய மற்றும் பொருளாதார கூட்டுறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
வியட்நாம் மற்றும் நார்வே அரசின் அதிகாரப்பூர்வ கூட்டு அறிவிப்பை தொடர்ந்து ஹனோவில் ஞாயிற்றுக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நார்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் லீச்டென்ஸ்டைன் ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்த ஐரோப்பிய தாராள வர்த்தக கூட்டமைப்புடன் இந்த வர்த்தக உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக வியட்நாம் தெரிவித்துள்ளது.
நீண்ட கால பேச்சுவார்த்தை மற்றும் பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு வெற்றிகரமாக இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
முதன் முதலில் 2012ம் ஆண்டு வியட்நாமிற்கும் EFTA ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய பிராந்தியத்தில் தங்களது பொருளாதார தடத்தை பதிக்க வியட்நாமிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கும் ‘பாரிய சேதம்’ ஏற்படும் என ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று(18) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிய சேதம்
“அவர்கள் எம்மைத் தாக்கத் துணியமாட்டார்கள் என மக்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம். அவ்வாறு தாக்கினால், அவர்களுக்கும் இப்பிராந்தியத்திற்கும் பாரிய சேதம் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அசீஸ் நசீர்சாதே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் அரச தொலைக்காட்சியின்படி, நாடாளுமன்றத்தில் வாக்களித்த 277 உறுப்பினர்களில் 237 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
இராணுவப் பதவி நிலை இல்லாத போதிலும், அக்லாகி பாதுகாப்பு அமைச்சில் 42 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
மேலும், 2013ஆம் ஆண்டு முதல் ஈரானின் பாதுகாப்புத் தொழில்துறை அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அணுவாயுதம் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை அவருக்கு 2007ஆம் ஆண்டு தடைகளை விதித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர், கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் வழுக்கி விழுந்ததன் காரணமாகவே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, குறிப்பாக சமூக ஊடகங்களில் சிலர் பொதுமக்களை தூண்டும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், தேரர் மீது எந்தவிதமான தாக்குதலும் நடத்தப்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உக்ரைனுக்கு வழங்கி வந்த மிக முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை, சிறிய இடைவெளிக்குப் பின்னர் அமெரிக்கா மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) இன்று (18) இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா தனது நகரங்களை நோக்கி தொடர்ச்சியாக வீசும் அதிவேக பெலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிவதற்கு உக்ரைன் அமெரிக்காவின் உளவுத் தகவல்களையே பெரிதும் நம்பியிருந்தது.
இந்நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது "நீக்கப்பட்டது என்று கூறினார்.
இதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இப்போது அது மீண்டும் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
உக்ரேனிய அதிகாரிகள் சிலர் ரஷ்யத் தாக்குதல்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இடம்பெற்றதாகக் கூறியபோதிலும், வொஷிங்டன் இன்னமும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வார ஆரம்பத்தில் கூறியிருந்தமை தெரிவிக்கப்படுகின்றது.